• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மினியேச்சர் பொருட்கள் செய்து அசத்தி வரும் கோவையை சேர்ந்த சகோதரர்கள்

October 27, 2021 தண்டோரா குழு

கோவை செல்வபுரத்தை சேர்ந்த பைசல் பசீனா தம்பதியினரின் மூத்த மகன் முகமது மிப்ஜல்(14), இளைய மகன் முகமது பாசில்(12). தனியார் பள்ளியில் பயின்று வரும் இவர்கள் இருவரும் கொரோனா காலத்தில் வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி பேருந்து, பைக், லாரி போன்ற மினியேச்சர் வாகனங்களை வடிவமைத்துள்ளனர்.

இதனை கண்ட சிறுவர்களின் பெற்றோர்களும் சிறுவர்கள் இவற்றை செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து ஊக்குவித்துள்ளனர். கடந்த ஊரடங்கு காலத்தில் பொழுது போக்கிற்காக எதையாவது இது போன்று விளையாட்டு பொருட்கள் செய்ய ஆரம்பித்த இவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட மினியேச்சர் பொம்மைகளை வடிவமைத்து அதில் மினி எல்.இ.டி விளக்குகள் போன்றவற்றை பொருத்தி அசத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு படி மேலாக சென்று சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனல் ஒன்றை துவக்கியும் அதிலும் இவர்கள் செய்வதை அப்லோட் செய்து வருகின்றனர்.இவற்றை வடிவமைக்க எங்களுடைய தாத்தா தான் முதல் உந்து கோளாக இருந்தார் என்றும் பள்ளிகள் துவங்கினாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை தொடர்ந்து செய்து வருவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். சகோதரர்களின் இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டுதலை பெற்று வருகிறது.

மேலும் படிக்க