• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

February 5, 2022 தண்டோரா குழு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நேற்று மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இதில் மாநகராட்சி 100 வார்டில் 1130 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் 7 நகராட்சிகளில் 1097 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் 33 பேரூராட்சிகளில் 2345 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்த வேட்புமனு தாக்கல் 4572 செய்துள்ளனர்.

மேலும் கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம் மத்திய மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்களின் வேட்பு மனுவை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஹர்_சகாய்_மீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் காவல்துறை ஆணையாளர் பிரதீப்குமார் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த தேர்தலில் பாதுகாப்பு பணி மற்றும் நிர்வாகம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க