• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் கட்டாயம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

June 24, 2020 தண்டோரா குழு

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் கட்டாயம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட
ஆட்சியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கடுமையான முயற்சி எடுத்து வருகிறோம்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்.கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு 75ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மக்கள் தொகை அதிகம், குறுகலான தெருக்கள் அதிகம், ஒரே வீட்டில் 7 பேர் வரை உள்ளனர்.மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கொரோனா தொற்று எளிதாக பரவுகிறது.சென்னையில் தற்போது வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று பரிசோதிக்கப்படுகிறது. சென்னையில் சுமார் 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு காய்ச்சல் உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.சென்னையில் மட்டும் கொரோனா சிகிச்சைக்கு 17,500 படுக்கை வசதிகள் உள்ளன.மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிகம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகின்றன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகளின் கீழ் கொரோனா கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் அமைச்சர்கள் 6 பேரும் ஈடுபட்டுள்ளனர்.கொரோனா பரவலை தடுக்கவே சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் அரிசி ரேசன்கார்டு தாரர்களுக்கு தலா ரூ.1000 விநியோகிக்கப்படுகிறது.சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகிறது.மேலும், நாளை முதல் 30 ஆம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களின் எல்லையும் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் அனைத்தவிதமான போக்குவரத்தும் ரத்துச் செய்யப்படுகிறது. மாவட்டத்தை விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க