• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடத்தில் ஆர்ப்பாட்டம்

February 3, 2022 தண்டோரா குழு

பொறுப்பாளர்களுக்கு கவுன்சிலர் சீட் ஒதுக்காமல் மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 வது வார்டில் திமுக பொறுப்பாளர்களுக்கு சீட்டு ஒதுக்காமல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 84 வது வார்டு கவுன்சிலர் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில்,இன்று கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளை கண்டித்து அப்பகுதி திமுகவினர் பைபாஸ் சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தின் போது திமுகவினருக்கு இந்த வார்டில் சீட்டு ஒதுக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர்.உக்கடம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும் படிக்க