• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்

October 11, 2021 தண்டோரா குழு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலனியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழக அரசின் இலவச வீடு வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது வேல்முருகனின் மாற்றுத்திறனாளியான மகனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட காலனிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறுவனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் ஆட்சியர் அணிவித்த நிகழ்வு முடிந்ததும், காலனியை பழுதுபார்க்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் திரும்ப பெற்று கொண்டதாகவும், அதிகாரிகளிடம் கேட்டபோதும், காலனியை கொடுக்காமல் இரண்டு மாதமாக இழுத்தடித்து வருவதாக வேதனை தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளர் நலத்துறை அதிகாரிகளின் இந்த செயலில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மகனுக்கு காலனிகளை பெற்று தர வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க