April 2, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர் கமல் ஹாசன் இன்று லயன்ஸ் கிளப்-ல் கோயம்புத்தூர் மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் பெண்ணியம் அமைப்பு உறுப்பினர்களை நேரில் சந்தித்தார்.
மாற்றுத்திறனாளிகளான நாங்கள் கமல் ஹாசன் அவர்களால் வாழ்க்கையை உத்வேகத்துடன் எதிர்கொள்ள பழகிக்கொண்டோம். அவரின் ‘அன்பே சிவம்’ ‘அபூர்வ சகோதரர்கள்‘ போன்ற திரைப்படங்கள்,நாங்களும் வாழ்வில் எதாவது செய்ய வேண்டும் என்பதை நினைவுப்படுத்தியது.அவை நாங்கள் திறன் படைத்தவர்கள் என்பதை நம்ப வைப்பதாய் அமைந்தது.
கமல்ஹாசன் அவர்களை சந்தித்தது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருணம். மக்களின் நலம் நாடும் தலைவருக்கு வரும் தேர்தலில் எங்கள் ஆதரவினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் தலைவர் கமல்ஹாசன் அவர்களை மாற்றுத்திறனாளிகள் கட்டிப்பிடித்து தங்கள் அன்பினையும் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினர்.மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான செயல் திட்டங்கள் அடங்கிய கோரிக்கை பட்டியலை நலச்சங்க உறுப்பினர்கள் தலைவர் கமல்ஹாசன் அவர்களிடம் அளித்தனர்.
கமல்ஹாசன் மாற்றத்திற்கான திறனாளிகளான உங்களுக்கு உரிமைகள் கிடைத்திட, தேவைகள் நிறைவேற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.