• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்பக மற்றும் கர்பபை வாய் புற்றுநோய்களுக்கான இலவச பரிசோதனை செய்வதற்கான வாகனம் துவக்கம்

February 4, 2021 தண்டோரா குழு

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பைபை வாய் புற்றுநோய்களுக்கான இலவச பரிசோதனை செய்வதற்கான வாகனம் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை வழங்க கோவை திருப்பூர் ஈரோடு என அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புதிய வாகனம் துவக்கவிழா கேஎம்சிஎச் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப் மற்றும் கே.எம்.சி.எச். மருத்துவமனை இணைந்து துவக்கியுள்ள இந்த சேவைக்கான துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்டு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஹீல் திட்டம் என துவங்கப்பட்ட இந்த வாகனம் மார்பக மற்றும் கர்ப்பபை புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கும் நோக்கத்தில் துவங்கபட்டுள்ளது. இதில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வசதியோடு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் முப்பதாயிரம் கிலோ மீட்டர் தூரம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்ய உள்ளனர்.

மேலும் இந்த வாகனத்தில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரு புறமும் இரண்டு பெரிய திரைகள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது. நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர் மோகன் நிர்வாக இயக்குனர் அருண் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் என்.சி அரோமேட்டிக் பிரைவேட் லிமிடட் சார்பாக அதன் தலைவர் ரோட்டேரியன் கிருஷ்ணசாமி துணைத் தலைவர் நடராஜ், சி.ஓ.ஓ பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க