• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து விஷால் அறிவிப்பு

March 10, 2018 தண்டோரா குழு

மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடக்காது என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டியும் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் எந்த புதுப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மார்ச் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கிறது. திரையரங்குகள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளது.  வேலை நிறுத்தம் குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,

”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக்கின் படி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது.

இதையடுத்து வருகிற 16-ம் தேதி முதல் அனைத்து படங்களின் படப்பிடிப்பும்  ரத்து செய்யப்படுகிறது.

மேலும் படிக்க