• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 15ல் தமிழக பட்ஜெட் தாக்கல்

March 7, 2018 தண்டோரா குழு

தமிழக அரசின் 2018- 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  மார்ச் 15-ம் தேதி காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் அல்லது இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அப்போதைய நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், வரும் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஏற்கெனவே  முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து  2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் மார்ச் 15-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

மேலும் படிக்க