• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ச் 13ம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

March 2, 2019 தண்டோரா குழு

தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 13ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு அணியும் அதிமுக தலைமையில் ஒரு அணியும் உருவாகி வருகிறது.அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிகவுடன் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் 13ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், ராகுல்காந்தியுடன், பிரியங்கா காந்தியும் வரலாம் என்றும் தென் தமிழகத்தில் தனது பிரச்சாரத்தை ராகுல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க