• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மார்ச் மாதத்திற்குள் பாஜக எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்” – அமித்ஷா

July 9, 2018 தண்டோரா குழு

மார்ச் மாதத்திற்குள் பாஜக எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்” என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜ நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து, ஒரு நாள் சுற்றுபயணமாக அமித்ஷா இன்று தமிழகம் வந்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கத்தில், பாரதிய ஜனதா கட்சியின் வாக்குச்சவாடி பொறுப்பாளர்கள் நிலையிலான 16 ஆயிரம் பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

2014-ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். பொன்.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மோடி அரசின் மக்கள் சேவையினால் பாஜக மேலும் மேலும் வளர்ந்து வருகிறது.கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு மோடி அரசு ஒதுக்கியுள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசனத்திட்டம், சென்னை மெட்ரோ திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.

கைகளை மூடி தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அனைவரும் முழங்க வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். தமிழகத்துக்கு நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல் கேலி செய்தார்கள்.மார்ச் மாதத்துக்குள் பாஜக எங்கு இருக்கிறது என்பதை நீங்களே பார்ப்பீர்கள். வாரிசு அரசியல், ஊழலை மோடி அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பாஜகவினர் உறுதியேற்க வேண்டும். ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு. தமிழின் பெருமையைக் காப்பதில் பாஜகவை போல வேறு எந்த கட்சியும் செயல்படவில்லை. அந்தந்த மாநிலத்தின் பெருமை, பாஜகவின் பெருமை என்று நாம் கருதுகிறோம் மக்களவை தேர்தல் தொடர்பாக செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி குறித்து பேச உள்ளோம் ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும்.

பாஜகவிற்கு 330 -க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் உள்ளனர்.2019 நடாளுமன்ற தேர்தலில் பாஜக வலிமை மிகுந்த கட்சியாக இருக்கும்.11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க