மானிய தொகையை ஒரே தவணையாக இம்மாத இறுதிக்குள் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு குறுந்தொழில் முனைவோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறியதாவது:
தமிழகத்தில் ரூ.25 லட்சத்துக்கு கீழ் உற்பத்தி திறன் கொண்ட குறுந்தொழில் நிறுவனங்கள் இயந்திரம் வாங்கும் தொகையில் 25 சதவீத மானியம் இதுநாள் வரை 3 ஆண்டுகளில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்தது. வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பில்லாத குறுந்தொழில் முனைவோர், தங்கள் கையில் உள்ள பணத்தை கொண்டும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் இயந்திரங்களை வாங்குவது வழக்கம்.
இதில், மானியத் தொகையை பிரித்து வழங்கி வந்ததால் குறுந்தொழில் நிறுவனத்தினர் கடன்களை திருப்பி செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.இதனால் வழங்கப்படும் மானியத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். எங்களது கோரிக்கையை தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார்.
மானிய தொகையை ஒரே தவணையாக வழங்கவும், அதுவும் இம்மாத இறுதிக்குள் மானியத் தொகையை குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கோவை தொழில் துறையினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது