• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது – மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் தகவல்

January 11, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாநில சமநிலை வளர்ச்சி நிதி பணி முன்னேற்றம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் பொன்னையன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொன்னையன் கூறியதாவது:

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவால் மாநில சமநிலை வளர்ச்சி நிதி திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பின்தங்கிய பகுதியினை முன்னேற்றம் அடைய செய்வதற்கு கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனிநபர் வருமானம், வறுமை ஒழிப்பு, தொழில்துறை முன்னேற்றம் ஆகிய திட்டங்கள் குறித்த கருத்துருக்களை மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு அனுப்பி அக்குழுவின் நிதி உதவியோடு பல்வேறு திட்டங்களை திறம்பட செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் வால்பாறை, ஆனைமலை வட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மாநில சமநிலை வளர்ச்சி நிதியின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வால்பாறை பகுதியில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி கொண்ட பிந்தைய செயல்பாட்டு பிரிவு, படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பிரிவுக்கான அறைகள், மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள், பள்ளிகளில் சோலார் மூலம் மின்சேமிப்பு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சமையலறை தோட்டம் ஏற்படுத்தி தரவும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பொன்னையன் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சாந்திமதி அசோகன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊராட்சி செயலர் சங்கமித்திரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க