November 27, 2021
தண்டோரா குழு
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான படம் மாநாடு. நிறைய சிக்கல்களை தாண்டி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், மாநாடு படத்தை நடிகர் ராஜிகாந்த் பாராட்டியுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில்,
சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. நல்லதை தேடி பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்குறது. மிகுந்த பலம் பெற்றோம். மொத்த படக்குழு சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.