April 12, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் மாஸ்க் அணியாத மற்றும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு ஒரே நாளில் ரூ.53 ஆயிரத்து 200 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியில் கொரோனா பரவல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, பொது இடங்கள், பேருந்துகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், ஷாப்பிங் மால் ஆகியவற்றில் கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத நபர்கள், நிறுவனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாநகராட்சியின் 5 மண்டலங்களில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மாஸ்க் அணியாத 266 பேருக்கு ரூ.200 வீதம் மொத்தம் ரூ.53,200 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, கொரோனா விதிகளை மீறிய கடைகளுக்கு ரூ.27,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த நடவடிக்கை தொடரும் எனவும், பொது மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும், கடைகளில் கொரோனா விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.