கோவை பயனீர் மில் ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்ட கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளியங்கிரி மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இந்த மாநகராட்சி மேல்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று உடல் உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.
உடனடியாக மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டு இப்பள்ளியில் கழிப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு