January 28, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக 100க்கும் கீழ் உள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதியடைந்து வருகின்றனர்.இதனிடையே கொரோனா வைரஸ் பரவலை மேலும் கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றினை எளிதில் கண்டறிய முடியும்,’’ என்றார்.