• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மக்கும் குப்பைகள் சேகரிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பு

December 15, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மக்கும் குப்பைகள் சேகரிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுதோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தினமும் சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு 90 டன்னாக இருந்த மக்கும் குப்பையின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது தினமும் சுமார் 175 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தனியாக பெறப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வாங்கும் போது எளிதாக கொண்டு சென்று செயலாக்கம் செய்ய சிரமம் இல்லாமல் இருக்கும். மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து ஹோட்டல் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கருப்பு கலர் பாலித்தீன் கவர்களை உபயோகிக்காமல், மக்கும், மக்கா குப்பைகளை தனித்தனியாக பெட்டிகளில் சேகரித்து மாநகராட்சி வண்டிகளில் ஒப்படைக்க வேண்டும்.

குப்பைக் கழிவுகளை குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க