January 9, 2021
தண்டோரா குழு
கோவை மத்தியம் மற்றும் வடக்கு மண்டலங்களில் உள்ள சித்தாபுதூர், சின்னசாமி ரோடு, தனலட்சுமி நகர், ஆவாரம்பாளையம், நவஇந்தியா ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சித்தாபுதூர் அருகே முககவசம் அணியாத தனியார் கடை ஊழியர்கள் 5 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ.1000 அபராதம் விதித்தார்.தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் தனியார் கடை வியாபாரிகளிடம் மாநகராட்சி கமிஷனர் கூறுகையில்,
‘‘குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது.அதற்கான குப்பைத்தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். சாலையோரங்களில் இருக்கும் தேவையற்ற பொருட்கள், பழுதடைந்த வாகனங்களை உடனடியாக அகற்றிட வேண்டும்,’’என்றார்.
இந்த ஆய்வின்போது மாநகர பொறியாளர் லட்சுமணன், மண்டல உதவி கமிஷனர்கள் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), செந்தில்குமார் ரத்தினம் (வடக்கு), செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பார்வதி (குடிநீர் திட்டம்) மற்றும் பலர் உடனிருந்தனர்.