• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி

December 10, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ரூ.44 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

இது குறித்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. டியூஆர்ஐபி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி, டிஎன்எஸ்யூடிபி திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி என மொத்தம் ரூ.44 கோடிக்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில், 289 பணிகளுக்கு 80 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரூ.20 கோடிக்கு தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, அரசுத் திட்டங்களில் ரூ.200 கோடி மதிப்பிலான சாலைகள் மற்றும் இணைப்பு சாலை பணிகளுக்காகவும், சூரிய மின்சக்தி திட்டத்திற்காகவும் அரசிடம் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம் அமைப்பதற்கும், குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கும் கருத்துரு சமர்பிக்கப்பட்டுள்ளதது. அதற்கான நிதியை கோவை வ.உ.சி.பூங்காவில் நடைபெற்ற விழாவில் முதல்வர் வழங்கியுள்ளார். பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் படிக்க