June 15, 2018
மஞ்சு தாமோதரன்
மனிதர்களை போலவே நாய்களும் உயிருள்ள ஜீவன்கள் அவைகளை வீட்டு விலங்காக பாதுக்கப்பரிக்காகவும் செல்ல பிரணியாகவும் வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.ஒரு சிலரின் அலட்சியத்தால் நாய்கள் சாலைகளில் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கும் சாலையில் செல்வர்களுக்கும் இடையூறாக உள்ளது.இப்படி சாலைகளிலும் தெருக்களிலும் சுற்றும் நாய்கள் சில நேரங்களில் மனிதர்களை கடிகவும் செய்கின்றன.இதை கட்டுப்படுத்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
கோவையில் நாய்களின் அட்டகாசம் அதிகமாகவே உள்ளது.நாய்கள் சாலைகளிழும் தெருக்களிலும் அதிக அளவில் சுற்றி திரிகின்றன.இது தொடர்பாக மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.இந்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பாக கட்டப்பட்ட “நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மருத்துவமனை உக்கடத்தில் உள்ளது அதுவும் பூட்டப்பட்ட நிலையில் செயல்படாமல் உள்ளது”.இவ்வாறு மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதால் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து வருகின்றது.
இது தொடர்பாக காந்திப்பார்க்கில் உள்ள முன்னாள் கவுன்சிலர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில்,
“நாய்களுக்கு சரியான பாதுகாப்பும் உணவும் இல்லாத காரணத்தால் தான் அவைகள் சாலைகளில் சுற்றி திரிகின்றன.அவைகள் உணவிற்காக தெரு ஓரங்களில் உள்ள கறிக்கடைகளில் போடப்படும் கழிவுகளை உண்டு வாழ்கின்றன.அவ்வாறு பச்சை மாமிஷங்களை உண்டு வாழ்வதால் உணவு இல்லாத நேரங்களில் மனிதர்களையும் கடிக்கின்றன.நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மாநகராட்சியின் அலட்சியம் ஆகும் அவர்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மருத்துவமனையை பெயருக்காக மட்டும் வைத்து கொண்டு அவற்றை செயல்படாத நிலையில் வைத்துள்ளனர்.
மேலும் பெயருக்காக மட்டும் நாய்களை பிடித்து கொண்டு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த “ரண” அறுவை சிகிச்சை செய்து அந்த நாய்களை வேறு ஒரு இடத்தில் விட்டு செல்கின்றன.இதனால் அவை அங்குள்ள நாய்களுடன் சண்டை போடும் நிலை ஏற்படுகின்றது.இந்த அறுவை சிகிச்சையை அவர்கள் சரியாக செய்யாமல் காயங்களுடன் அப்படியே விட்டு விடுவதால் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையில் இறக்கும் நாய்களை அப்டியே குளங்கள் ஓரங்களிலும் தெரு ஓரங்களிலும் போட்டு செல்வதால்,தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி குளத்தில் போடுவதால் நீர் மசுபாடும் ஏற்படுகின்றது.குளத்தில் உள்ள மீன்களை உண்ணுவதால் மனிதர்களுக்கும் பல நோய்கள் ஏற்பப்படும்.இதுபோல் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் மாநகராட்சி ஈடுபட்டு வருகின்றன.இவ்வாறு மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதால் நாய்களை இனப்பெருக்கம் மேலும் அதிகரிக்கும்.
நாய்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதால் நாய்கள் மற்றவர்களை கடிப்பதான் மூலம் ரேடிஸ் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.இது தொடர்பாக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சி அரசு அளிக்கும் பணத்தை அவர்களே வைத்து கொண்டு பொய்யான கணக்கு காட்டுகின்றன.மேலும் மத்திய அரசு பசுக்களின் மீது காட்டும் அக்கறையை மனிதர்கள் மீதும் காட்ட வேண்டும்”.என கூறினார்.
இந்த நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கட்டப்பட்ட மருத்துவமனையை மாநகராட்சி செயல்ப்படுத்துமா அல்லது இது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா???