July 27, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் எனக்கூறி தொழில்முனைவோர்களிடம் ஜி.எஸ்.டி விவரம் சேகரிப்பட்டது.இதற்கு தொழில்முனைவோர்கள், அவர்கள் உன்மையில் மாநகராட்சி பணியாளர்களா? என மாநகராட்சி நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சியில் தற்காலிக முன்களப்பணியாளர்கள் மூலமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாநகராட்சி கேட்பு பதிவேட்டில் இல்லாத நிறுவனங்களை புதிதாக சேர்க்கவும்,பட்டியலில் உள்ள காலிசெய்யப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களை நீக்கம் செய்து புதிய கேட்பு பதிவேடு உருவாக்கவும் இப்பணி நடைபெற்று வருகிறது.
இதில் தொழில்முனைவோர்கள் ஜி.எஸ்.டி எண் கட்டாயம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்ற விவரங்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும்.மேலும் மாநகராட்சியின் அறிவுரைப்படியே தற்காலிக முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.