• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைக்களுக்கு பூட்டு

January 22, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும்,மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள் , தனியாருக்கு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், நீண்ட மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, கடந்த வாரங்களில் 6 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ள 15 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் 7 காய்கறிக் கடைகள் மற்றும் கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியில் 2 கறிக்கடைகள் என 9 கடைகள், 6 மாதங்களுக்கு மேலாக மாநகராட்சிக்கு வாடைகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியணின் உத்தரவுப்படி, மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மேனகா குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் வாடகை செலுத்தாத 9 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க