June 6, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த மாணவி பிரதீபா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருக்கின்றனர்.
இந்நிலையில்,நீட் தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.பேரவையில் உயிரிழந்த மாணவி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.மேலும்,மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.