July 13, 2018
தண்டோரா குழு
கோவையில் மாணவி லோகேஸ்வரி உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை விசாரித்து வருவாதகவும், கல்லூரி நிர்வாகம் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவிலான 18 வது,அக்ரி இன்டெக்ஸ் -2018 வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.இதன் துவக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
“கோவை கலைமகள் கல்லூரி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது எதிர்பாராத செயல் என்றும், கண்டிக்கதக்க கூடிய செயல் எனவும் தெரிவித்தார்.மேலும் வீடியோவில் அந்த மாணவியை வற்புறுத்தி தள்ளிவிடுவது தெரிகிறதாகவும்,இது மோசமன செயல் என கண்டனம் தெரிவித்தார்.இது போன்ற கடுமையான செயல்கள் மேற்கொள்ள கூடாது எனக் கூறிய அவர்,இம்மாதிரி பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் விருப்பப்பட்டு பயிற்சி மேற்கொள்கிறார்களா என பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும்,கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு
காவல்துறை விசாரித்து வருவதாகவும்,யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.