• Download mobile app
26 May 2025, MondayEdition - 3393
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவியை கழிவறை சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்திய தலைமையாசியை மீது ஆட்சியரிடம் புகார்

February 17, 2020

தாழ்த்தப்பட்ட மாணவியை கழிவறை சுத்தம் செய்யவைத்து துன்புறுத்திய தலைமையாசியை மீது காவல் துறையில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியரிடம் பெற்றோர் புகாரளித்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கிவரும் புதுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கழிவறை சுத்தம் செய்ய வைத்துள்ளார். தலைமை ஆசிரியர் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் இன்று மனு அளித்தனர்.

மகேஸ்வரி கூறியதாவது,

‘எனது மூத்த மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக எனது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் அழுதவாறு, உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்தால். அவளிடம் நான் விசாரித்த போது, பிப்ரவரி 11ஆம் தேதி பள்ளியில் உள்ள கழிவறையை தலைமை ஆசிரியர் குமரேஸ்வரி சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், கடந்த இரண்டு வாரங்களாக கழிவறையை சுத்தம் செய்து வருவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இதனையடுத்து நானும் பெற்றோர்கள் சிலரும் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தோம். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளியில் இல்லை. இந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மீது புகார் கொடுத்தோம். ஆனால் அதற்கும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் இந்த ஆசிரியர் எனது மகள் உட்பட பலரை சாதிய ரீதியாக திட்டியுள்ளார் எனவும் எனது மகளை மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. இதனால் எனது மகள் மற்றும் நான் மன உளைச்சல் அடைந்துள்ளோம். மேலும், மகளின் கைகளில் எறும்புகள் கடித்து காயம் ஏற்பட்டுள்ளது எனவே சாதியின் பெயரால் அவமானப்படுத்திய தலைமை ஆசிரியை குமரேஷ்வரி மீது பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளோம்’ என்றார்.

மேலும் படிக்க