March 27, 2018
தண்டோரா குழு
மாணவர்கள் அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாஸன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசுகையில்,
“கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லவிடாமல் என்னை தடுக்க பல தடைகள் வருகிறது.படிப்பை முடித்து வந்தவுடன் உங்களை தாக்கப்போவது அரசியலும், ஊழலும் தான்.மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.அரசியலில் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும்,நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு மத்தியில் யாருக்கும் இல்லை நம் வீட்டுப் பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை தமிழக அரசுக்கு உள்ளது.நான் செய்ய வேண்டியதை நானும், நீங்கள் செய்யவேண்டியதை நீங்களும் செய்யும் நேரம் வந்துவிட்டது”. என்று கூறினார்.