• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவ,மாணவிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

March 8, 2017 தண்டோரா குழு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் எவ்வித அச்சமும்மின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. கோவையில் கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி என இரண்டு கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் 34,505 மாணவ மாணவிகளும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களில் 8001 மாணவ மாணவிகளும் என மொத்தம் 42,505 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுத கோயம்புத்தூர் கல்வி மாவட்டத்தில் 9 மையத்தில் 1,117 நபர்களும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 1 மையத்தில் 326 நபர்களும் என 1443 பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பிற்கு தட்கல் தேர்வு முறையில் விண்ணப்பித்து 377 நபர்கள் 3 மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர்.

“கோவையில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் முடியும் வரை மாணவ,மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் போது எவ்வித அசம்பா விதங்கள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.

எனவே மாணவ மாணவிகள் எவ்வித அச்சமும்மின்றி சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்” என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க