• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாட்டு தீவன வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை

March 24, 2018 தண்டோரா குழு

கால்நடை தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான,லாலு பிரசாத்துக்கு எதிராக, மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.முதல் வழக்கில், லாலுவுக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, 2013ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இரண்டாவது வழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து,சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.மூன்றாவது வழக்கில், லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கும், ஐந்து ஆண்டு சிறை மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், – ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என, 48 பேரும் குற்றவாளிகள் என, சிறப்பு நீதிமன்றம் தண்டனை அறிவித்தது.

இந்நிலையில், கால்நடை தீவனம் தொடர்பான மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில்
உள்ளன.அதில், தும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட நான்காவது வழக்கில், ராஞ்சி நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், தீவன ஊழல் வழக்கில் 18 பேர் குற்றவாளிகள், 12 பேரை விடுவித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க