December 13, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் ஆனது, உயர் தொழில்நுட்பம் மற்றும் புதிய டிரெண்டுகளை உருவாக்கும் பிரீமியம் எஸ்யூவியான எக்ஸ்யூவி 7 எக்ஸ்ஒ -க்கான முன்பதிவுகள் தொடங்குவதை அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவிக்கான முன்பதிவில் முன்கூட்டியே இடம்பிடிக்க, டிசம்பர் 15, 2025 அன்று மதியம் 12:00 மணி முதல், 21000 ரூபாய் முன்பதிவுத் தொகையுடன் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான டீலர்ஷிப், எரிபொருள் வகை மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் வசதியைப் பெறுவார்கள்.
எக்ஸ்யூவி 7 எக்ஸ்ஒ கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எரிபொருள் விருப்பங்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கும். முன்பதிவு செய்யும் வசதி அனைத்து மஹிந்திரா டீலர்ஷிப்களிலும் மற்றும் நிறுவனத்தின் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கும்.