• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கினால் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்ற திட்டம்

November 12, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்வதற்கும், கழிவுகளை தூர்வாருவதற்கும் அதிக திறன் கொண்ட கழிவுநீர் உந்து மற்றும் அடைப்புகளை சரி செய்யும் சூப்பர் சக்கர் வாகனம் கோவை மாநகராட்சிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது.

இந்த வாகனம் அதிக நீரேற்று திறன் கொண்ட பம்பு அதாவது மணிக்கு 85000 லிட்டர் உறிஞ்சும் திறன் கொண்டது. இவ்வாகனம் கழிவு நீரை மறுசுழற்சி செய்து திரும்ப உபயோகிக்கும் அமைப்பினை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சாலைகள், சந்திப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.
மழைக்காலம் தொடங்கும் முன் பணிகள் ஓரளவுக்கு முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கினார் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தேவையான மோட்டார்கள், பம்புகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கினார் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மேலும் படிக்க