• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலைவாழ் கிராம மக்களுக்கு மக்களிகை பொருட்கள் வழங்கல்

April 10, 2020 தண்டோரா குழு

ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக ஐந்து மலைவாழ் கிராம மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

கொரொனா எதிரொலி காரணமாக அனைத்து தொழிற்கூடங்களும் மூடப்பட்டன. தமிழக அரசும் ஊரடங்கு ஊத்திரவை ஏப்ரல் 14 ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தினக்கூலிகளாக வயல்வெளிகளுக்கு செல்லும் மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக அதன் தலைமை ஆணையாளர் பிரசாத் உத்தமன் மற்றும் அதன் நிர்வாகிகள் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சர்க்கார் போரெத்தி, ஜாகீர் போரெத்தி,பச்சான் வயில், சவுக்குகாடு , புதுப்பதி ஆகிய மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி , காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.

கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து வட மாநிலத்தவர்கள் மற்றுக் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ரூபாய் 6 லட்சம் செலவில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கி வருவதாகவும், முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு லட்ச ரூபாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க