• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்படியை வழங்கிடுக – பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தல்

September 29, 2021 தண்டோரா குழு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக வழங்கிட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார்.

பாரதியார் பல்கலை கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கடந்த மூன்று தலைமுறைகளாக இழப்பீடு பெறாமல் அலைகழிக்கப்படுகின்றனர். கோவை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஏழைஎளிய விவசாயிகளுக்கு எதிராக மேல்முறையீட்டை அரசு செய்துள்ளது. தனது நிலத்திற்கான இழப்பீட்டை பெறாமலேயே பல விவசாயிகள் இறந்து போயுள்ளனர். இவர்கள் வீட்டு சுப நிகழ்வுகள் கூட பொருளாதார வசதிகள் இல்லாமல் தடை பட்டு நிற்கிறது.

இது தொடர்பாக தொடர்ந்து விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி இடைவிடாது போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஆட்சி மாறியுள்ள சூழலில் இந்த இழப்பீடு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இவ்விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. இதன்தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் புதனன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.

அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற வேண்டும். கோவை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும்போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என்கிற உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வலியுறுத்தினார்.

மேலும், காடம்பாடி, வாரப்பட்டி உள்ளிட்ட சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது. உடனடியாக இதனை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டுப்பாளையம், காரமடை பகுதியின் மலைப்பகுதிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய மலைப்படியை தரப்படாமல் உள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து மலைப்படியை வழங்க வேண்டும். இதேபோன்று காரமடை பகுதியில் பணியாற்றும் தூய்மைத்தொழிலாளர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ஊதியம் தரப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளளூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. இது திறக்கப்பட்டாள் அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு வசதியாக இருக்கும் உடனடியாக அப்பள்ளியை திறப்பதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜெ.எஸ்.சமீரன் உறுதியளித்தார்.

மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போது ல் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுடன் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஎம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக பாரதியார் பல்கலை கழத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க