• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலாக்காவுக்குத் தூதராகிறாரா ரஜினிகாந்த்?

March 30, 2017 தண்டோரா குழு

மலேசியாவில் உள்ள சுற்றுலா நகரமான மலாக்காவுக்குத் தூதராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலாக்காமலேசியாவில் முக்கிய சுற்றுலா நகரத்தில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் அதிகமான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் சுற்றுலா விற்காக வந்து செல்கின்றனர். இதனால் மலேசிய சுற்றுலாத்துறை, மலாக்காவுக்கு பிரபலமான இந்தியர் ஒருவரைத் தூதராக நியமிப்பது வழக்கமாக கொண்டுள்ளது. அதன்படி, தற்போது இந்தி நடிகர் ஷாரூக் கான், தூதராக இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான கபாலி படம், முழுக்க மலேசியாவில் படமானது. மலாக்காவிலும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அங்குள்ள தமிழர்கள் ரஜினிகாந்த் மீது காட்டியை அன்பை பார்த்த பின்,ரஜினிகாந்த்தை மலாக்கான தூதராக்க அந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, மலேசிய அரசு அதிகாரிகள் ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், இன்னும் ரஜினிகாந்த் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளமலேசிய பிரதமர் ரசாக்நஜுப்சென்னை வர உள்ளார். அப்போது மலேசிய நாட்டின் சுற்றுலா தூதராக ரஜினியை நியமிப்பது குறித்து சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி ரஜினி ஒப்புதல் கொடுத்தால், ஷாரூக்கானுக்கு பதிலாக ரஜினிகாந்த் மலாக்கா தூதராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க