• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த முன்னாள் எம்எல்ஏ இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய முக.ஸ்டாலின்

November 10, 2022 தண்டோரா குழு

ஈரோடு,கரூர் அரவக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விமான மூலம் இன்று கோவை வந்தடைந்தார்.அப்போது விமான நிலையத்தில் அமைச்சர்கள் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவை வால்பாறையில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கோவை தங்கம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2021 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி உடல் நல குறைவால் உயிர் இழந்தார். இவரது இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் கோவை தங்கத்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் செந்தில் பாலாஜி சாமிநாதன் முத்துசாமி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர்.இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஈரோடு செல்கிறார்.

மேலும் படிக்க