February 21, 2018
தண்டோரா குழு
நடிகர் கமலஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணம் தொடங்கியதில் அரசியல் இல்லை.இதனையடுத்து கலாம் படித்த பள்ளிக்கு சென்று பார்வையிடலாம் என்று நினைத்தேன். ஆனால் தமிழக அரசு கலாம் படித்த பள்ளியை பார்வையிட தடைவிதித்தது.மேலும், கலாமின் பள்ளிக்கு செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர நான் பாடம் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது.என்று கூறினார்.