• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு

April 30, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் பெரும்பாலான கல்லூரிகளில் இடங்கள் காலியாக இருந்தன. இதனையடுத்து மாணவர் சேர்க்கைக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை 15 விழுக்காடு குறைப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

இதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, புதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் 262ல் இருந்து 320 வரை ஆகும். எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் – 225 மதிப்பெண். மாற்றுத் திறனாளிகள் – 244 மதிப்பெண் எடுத்திருந்தால் போதும் என மருத்துவ கல்வி செயலாளர் கூறியுள்ளார். இந்த மதிப்பெண் பெற்றுள்ளவர்கள், நாளை முதல், 3-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் எடுத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார்.

மேலும், எம்.டி.எஸ் படிப்பிற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணும் குறைக்கப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி செயலாளர் கூறியுள்ளார். பொதுப்பிரிவு -149 மதிப்பெண் மறறும் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி பிரிவு-115 மதிப்பெண், மாற்றுத் திறனாளிகள்-133 மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார். இவர்களும், நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க