February 13, 2018
தண்டோரா குழு
மருத்துவமனையில் தான் நேரில் பார்க்கவில்லை என்று இளவரசியின் மகனும் ஜெயா டி.வி.தலைமைச் செயலதிகாரியுமான விவேக் ஜெயராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையம் கடந்த வாரம்இளவரசியின் மகனும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பியது.ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பிய சம்மனின் பேரில் இன்று ஆஜரான விவேக்ஜெயராமனிடம் சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் வெளிநாட்டில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்றும் விவேக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், மீண்டும் வரும் 28ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.