• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவக் கழிவுகள் அகற்றுவது குறித்து கண்டன ஆர்ப்பாட்டம்

April 17, 2023 தண்டோரா குழு

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி PARA MEDICAL LAB EDUCATION and WELFARE ASSOCIATION கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி PARA MEDICAL LAB EDUCATION and WELFARE ASSOCIATION சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும்,கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களுக்கு மருத்துவக் கழிவுகளை எடுக்க தனியார் நிறுவனத்தால் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 2000 முதல் 2800 வரையிலான கட்டணத்தை 750 ஆக குறைக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். மேலும் இதில் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் அவர்களது இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவை வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆகியோருக்கு மனுவாக அனுப்ப உள்ளனர்.

மேலும் படிக்க