February 2, 2018
தண்டோரா குழு
மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின் ஜோ மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ரேவதி கயிலைராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்வின் ஜோ நியமனத்தை ரத்து செய்ததுடன், ரேவதியை நியமிப்பது குறித்து பரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரேவதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
மேலும்,எட்வின் ஜோவுக்கு மருத்துவக் கல்லூரி டீனாக 10 ஆண்டு அனுபவம் உள்ளதாகவும், நிர்வாக அனுபவமும் எட்வின் ஜோவுக்கு உள்ளதாகவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.