• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மரங்களில் விளம்பரம் செய்ய தடை கோரிய வழக்கில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

January 21, 2019 தண்டோரா குழு

சாலை ஓரம் உள்ள மரங்களில் விளம்பர அட்டைகள் மற்றும் விளம்பர பாதகைகள் வைப்பதற்க்கு தடை கோரிய வழக்கில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை
செயலாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரம் செய்வது தொடர்பாக கும்பகோணத்தை சேர்ந்த பாவனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநால
மனுதாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,

“தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர அட்டைகள் மரங்களில் ஆணியால் அடிக்கப்படுகிறது. இதனால் மரத்தின் தன்மை குறைந்து, அதில் உள்ள இலைகள் உதிர்ந்து போதிய வளர்ச்சி இல்லாமல் மரத்தின் கூடு மட்டுமே இருப்பதாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மீது மரக்கிளைகள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் சுத்தமான காற்று, பருவகால மழை இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறையினர் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற மட்டுமே செய்கிறார்கள். புதிய கன்றுகளை வைப்பதில்லை. இதனால் அந்த இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதையடுத்து சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

மனு தொடர்பாக மாவட்ட வனத்துறையினர் ஓரிரு மரங்களில் மீது உள்ள பலகைகளை மட்டும் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முக்கிய சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் அகற்றப்படவில்லை. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகள் மீது மரக்கிளைகள் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. இதையடுத்து சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றவும், மரங்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் இம்மனு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என உதிரவிட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கை பிப்ரவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க