May 5, 2021
தண்டோரா குழு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தலைமையில் கோவை தெப்பக்குளம் மைதானத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது உரையாற்றிய வானதி சீனிவாசன்,
மேற்குவங்க தேர்தலை முடிவுகள் வெளிவந்ததை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதனை மம்தா பானர்ஜி கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் கூறினார்.
மேலும், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படும் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகவும் அவர் உரையாற்றினார்.
கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் குறைந்த அளவிலான பாஜகவினர், உரிய பாதுகாப்போடு இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.