April 21, 2018
தண்டோரா குழு
காவிரி போரட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யுமாறு நடிகர் சிம்பு காவல் ஆணையர் அலுவலகம் சென்று கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு சென்னையில் ராணுவ கண்காட்சி திறப்பு விழாவுக்கு வந்திருந்தார்.அப்போது அவரை எதிர்த்து கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மன்சூர்அலிகானை விடுவிக்கக் கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் சிம்பு உயர் அதிகாரி ஒருவரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஐ.பி.எல். போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசாரை தாக்கியது தவறு.அதில் எனக்கு உடன்பாடில்லை.மன்சூர் அலிகான் கைது சரியென்றால் அவரை போல் பேசிய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.மேலும்,மன்சூர் அலிகான் தவறாக பேசியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்று கூறினார்.