• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனுதர்மத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் – தபெதிகவினர் மனு

September 20, 2022 தண்டோரா குழு

மனுதர்மத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் மனு அளித்தனர்.

பின்னர் பேசிய அவர்,

இந்து மதத்திற்கு ஆதாரமாக இருக்கும் மனுதர்மத்தில் சூத்திரர்களை இழிவாக சொல்லி இருக்கின்றனர் எனவும் அந்த மனுதர்மத்தை இந்திய அரசியலமைப்பும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றது எனவும் பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தும் மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பான மனுவை இந்திய பிரதமருக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக கொடுக்கவே வந்திருப்பதாகவும், பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்குவதை போல , மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை பிறப்பிக்கும் மனுதர்மத்தை ஒன்றிய அரசு தடை செய்ய வேண்டும் எனவும் தபெதிகவினர் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க