• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க கண்டன ஆர்ப்பாட்டம்

March 27, 2018 தண்டோரா குழு

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று(மார்ச் 27)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பல வருடங்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.ஆனால் மனிதர்களை,  கழிவுகளை அகற்ற பயன்படுத்துவதில்லை என அரசு பொய்யான தகவலை தெரிவித்து வருவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மனித கழிவுகளை மனிதன் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரளாவைப்போல் ரோபோக்களை பயன்படுத்த வலியுறுத்தினர்.பாதாள சாக்கடை மரணங்களை தடுத்து நிறுத்த,கழிவு நீர் சுத்தம் செய்யும் மனிதர்களை ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்திட வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க