November 27, 2017
மத்திய பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனிதனின் வயிற்றில் சுமார் 263 நாணயங்கள், பிளேடுகள், ஊசிகள் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.
மத்திய பிரதேஷ மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது முஹமத் மக்சூத். திடீரென அவருக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி ரேவா நகரிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.அப்போது அவருடைய வயிற்று வலிக்கு என்ன காரணம் என்று தெரிந்துக்கொள்ள, மருத்துவர்கள் அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்துள்ளனர். அந்த பரிசோதனையின் முடிவில், அவருடைய வயிற்றில் சுமார் 263 நாணயங்கள், பிளேடுகள், ஊசிகள் இருப்பதை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவற்றை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். பின்னர் 6 டாக்டர்கள் கொண்ட குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 10-12 ஷேவிங் பிளேடுகள், நான்கு பெரிய ஊசிகள், ஒரு செயின், 263 நாணயங்கள், சில கண்ணாடி துண்டுகள் ஆகியவற்றை அவருடைய வயிற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். இதனுடைய மொத்த இடை சுமார் 5 கிலோ இருந்தது.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறும்போது,
“நல்ல மனநிலை இல்லாத காரணத்தால், இவற்றையெல்லாம் இவர் ரகசியமாக சாப்பிட்டுள்ளார். சாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 6 மாதங்கள் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் ரேவாவிற்கு கொண்டு வரப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்.” எனக் கூறினார்