February 28, 2018
தண்டோரா குழு
மனிதக் கழிவை அகற்றும் ரோபோவை, இந்தியாவுக்கே அறிமுகப்படுத்திய கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாகசாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில்ரோபோவை ஈடுபடுத்தும் தொழில்நுட்பம் கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். கழிவுநீர் பொங்கி வழியும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதன்முறையாக ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
“பண்டிகோட்” என பெயரிடப்பட்ட இந்த ரோபா, ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும். மாநில அரசின் நிதி உதவியோடு”ஜென் ரோபோட்டிக்ஸ்” என்ற நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோபை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இந்த ரோபோபை அறிமுகப்படுத்திய கேரள அரசுக்கு வாழ்த்து தெரிவித்து கமல் டுவீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும்ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.
இவ்வாறு கூறியுள்ளார்.