• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் ம.நீ.ம கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

April 9, 2022 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் மற்றும் சொத்து வரியை உயர்த்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் மற்றும் சொத்து வரியை உயர்த்தியதற்காக மத்திய மாநில அரசுகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் மாநில தலைவர் தங்கவேல் மாநில மாணவர் அணி செயலாளர் ராகேஷ்,மாநில மகளிர் அணி செயலாளர் மூகாம்பிகை ,மணடல ஊடக பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால் மாவட்ட செயலாளர்கள் தம்புராஜ்,சிட்கோ சிவா,பிரபு,மனோரம்யன் மற்றும் நகர செயலாளர் கள்,வார்டு செயலாளர்கள் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்

மேலும் படிக்க