February 1, 2018
தண்டோரா குழு
மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட்டில் ஏராளமான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து அவர் கூறும்போது,
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. பட்ஜெட்டில் அனைத்து துறைகள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையையும், விருப்பங்களையும் வலுப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
விவசாயிகளின் கனவை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் நோக்கம். அனைவருக்குமான வளர்ச்சி என்ற கனவை மத்திய பட்ஜெட் நனவாக்கியுள்ளது.புதிய இந்தியாவிற்கு புதிய வாய்ப்புகளை இந்த பட்ஜெட் கொண்டுவரும் என்றார்.
மேலும், மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கூறி பிரதமர் மோடி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டுக்குபாராட்டு தெரிவித்துள்ளார்.