• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய, கிழக்கு மண்டலங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

January 8, 2021 தண்டோரா குழு

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டாடாபாத், ராஜீ நாயுடு லே-அவுட், ஆம்னி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்கடைகளில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குப்பைகளை சாலையோரங்களில் கொட்டக்கூடாது, குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். குப்பைகளை சாலைகளில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம், சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறப்பட்டுள்ளதா? இல்லையா? என கேட்டறிந்தார். அடையாள அட்டை பெறப்படவில்லை என்றால் உடனடியாக பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு சாலையோர வியாபாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து கோவை கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பீளமேடு, பி.எஸ்.ஜி. ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது மண்டல உதவி கமிஷனர்கள் மகேஷ்கனகராஜ் (மத்தியம்), முருகன் (கிழக்கு), செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க